ஆசை படலாம் பேராசை பட கூடாது சொல்லுவாங்க. என்ன பொருத்த வர பேராசை படலாம் தப்பில்ல. ஆனா அந்த ஆசைய அடைய நம்ம தான் உழைக்கனும். அப்போ தான் அது நிலைக்கும். எவனோ சும்மா காசு பாத்து தருவான் ஒரே நாளுல பணக்காரன் ஆகிடலானு சுத்திட்டு திரியுரவங்க நிரைய பேர். தெரிஞ்ச ஒருத்தருக்கு ஒரு வேளை சாப்பாடு வாங்கி கொடுக்க நாளு நேரம் யோசிப்பாங்க. ஆனா எவனோ தெரியாத ஒருத்தன் ஒரு லட்சம் காசு குடுங்க ஒரே வாரத்துல பத்து இலட்சம் தாரேனு சொன்ன போதும். கடன் வாங்கியாது குடுத்துருவாங்க. அடுத்து எல்லாதையும் விட்டுட்டு நடு தெருல நின்னு புலம்ப வேண்டியது. தினமும் இதே போல ஒரு சிலர் நான் பாத்துட்டு தான் இருக்கேன். நம்ம ஏமாளியா இருக்குற வர ஏமாத்த நிறைய பேர் இருக்க தான் செய்வாங்க. யாரும் இத பார்த்து திருந்த போரது இல்ல. இருந்தாலும் எனக்கு ஒரு திருப்தி. 😕
#FunnyPeoples
#FunnyPeoples